கரூர் வைஸ்யா வங்கி நடப்பு 2016-17 நிதியாண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 24.26 சதவிகித வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது.
தமிழகத்தின் கரூர் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் தனியார் துறை வங்கியான கரூர் வைஸ்யா வங்கி, நடப்பு 2016-17 நிதியாண்டின் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான மூன்றாம் காலாண்டில் ரூ.93,525 கோடி வருவாய் பெற்றுள்ளது. ஆனால் கடந்த 2015-16 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இவ்வங்கி ரூ.85,208 கோடி வருவாய் பெற்றிருந்தது. எனவே முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, இது 24.26 சதவிகித வருவாய் இழப்பாகும்.
அதேபோல, மூன்றாவது கலாண்டில் கரூர் வைஸ்யா வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை ரூ.55,066 கோடியாகும். இதற்கு முந்தைய ஆண்டில் ரூ.47,336 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. அதேபோல, 2015 அக்டோபர் - டிசம்பரில் வழங்கிய கடன் ரூ.37,872 கோடியிலிருந்து உயர்ந்து, 2016 அக்டோபர் - டிசம்பரில் ரூ.38,459 கோடியாக அதிகரித்திருக்கிறது. மேலும், வட்டி வருவாய் ரூ.448.20 கோடியிலிருந்து 15.49 சதவிகிதம் வளர்ச்சியடைந்து ரூ.517.63 கோடியாக உள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத கால அளவில் கரூர் வைஸ்யா வங்கியின் நிகர லாபம் ரூ.429.63 கோடியிலிருந்து 9.59 சதவிகிதம் சரிவடைந்து ரூ.388.42 கோடியாக இருக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...