21 ஆவது ஏர்செல் சென்னை ஓப்பன் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள
எஸ்.டி.ஏ.டி ஸ்டேடியத்தில் நாளை (ஜனவரி 2-ஆம் தேதி) தொடங்குகிறது. வருகிற
8-ஆம் தேதி வரை இந்தப்போட்டி நடைபெறும். உலகின் 6-ஆம் நிலை வீரரும், 2 முறை
சாம்பியனுமான சிலிச் குரோஷியா, 14ஆம் நிலை வீரர் ராபர்ட்டோ பவுடிஸ்டா
(ஸ்பெயின்),
அல்பர்ட்டோ ராமோஸ் (ஸ்பெயின்), மைக்கேல் யூஜனி போன்ற முன்னணி வீரர்கள் உள்ளிட்ட 32 பேர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கிறார்கள். மரின் சிலிச், பவுடிஸ்டா, ரமோஸ், கிளைஜான் ஆகிய நட்சத்திர வீரர்கள் பைஆர்டர் மூலம் 2ஆவது சுற்றில் நேரடியாக விளையாடுகிறார்கள். வைல்டு கார்டு மூலம் பிரதான சுற்றில் விளையாடும் தமிழகத்தின் ராம்குமார் முதல் சுற்றில் தகுதி நிலை வீரருடன் மோதுகிறார். மற்றொரு இந்திய வீரரான சருகத் மைனெனி தனது முதல் சுற்றில் முன்னாள் சாம்பியனான ரஷ்யாவின் மிகைல் யூஜனியுடன் மோதுகிறார். இப்போட்டி மைனெனிக்கு கடும் சவாலானது. தகுதி சுற்றில் விளையாடி வரும் இந்திய வீரர் யுகி பாம்ப்ரீ முதல் ஆட்டத்தில் இத்தாலி வீரர் மார்கோ செச்சினாட்டோவை வீழ்த்தினார். யுகிபாம்ப்ரி அடுத்த ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் நிகோலஸ் கிச்சருடன் மோதுகிறார். இரட்டையர் பிரிவில் லியாண்டர் பெயஸ், போபண்ணா, ஜீவன் நெடுஞ்செழியன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி பரிசுத்தொகை ரூ.3 கோடியே 35 லட்சம் ஆகும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...