💷 நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை கொண்டுவரும் நோக்கில்
ஜிஎஸ்டி மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
💴 இந்த மசோதாவை வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
💷 ஆனால், மத்திய, மாநில அரசுகளிடையே அதிகார பகிர்வு தொடர்பான எந்த முடிவும் எட்டப்படவில்லை.
💵 இதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. தங்களது உரிமைகளுக்கு பாதிப்பு இல்லாமல் இதை செயல்படுத்த வேண்டும் என்று மாநிலங்கள் கோரி வருகின்றன.
🔶 மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நேற்று மீண்டும் கூட்டம் நடந்தது.
🔷 இதில், ஜிஎஸ்டி வரி விதிப்பில், ஆண்டு ₹1.5 கோடிக்கு கீழ் உள்ள வர்த்தகத்தில் இருந்து வரும் வரியை மாநிலங்கள் 90 %, மத்திய அரசு 10 % கையாளும்.
🔶 இதேபோல், ₹1.5 கோடிக்கு மேல் உள்ள வர்த்தகத்தில் 50 % மத்திய அரசாலும், 50 % மாநில அரசாலும் கட்டுப்படுத்தப்படும் என முடிவாகியுள்ளது.
🔷 கடலோர மாநிலங்கள் 12 கடல் மைல் வரையிலான வர்த்தக நடவடிக்கைகளுக்கு வரி விதிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
🔶 இதையடுத்து, மாநில ஜிஎஸ்டி, சிஜிஎஸ்டி ஆகியவற்றுக்கான துணை மசோதாக்கள் குறித்து பிப்ரவரி 18ம் தேதி நடக்கும் அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.
🔷 இதனால் வரும் ஜூலை 1ம் தேதியில் இருந்து, இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவது என்றும் மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...