பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை முதல் 17,693 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
சென்னையில் வசிக்கும் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பொங்கல் விழாவை கொண்டாட
சொந்த ஊருக்குச் செல்வதற்கு வசதியாக ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள்
இயக்கப்பட்டு வருகின்றன.
தீபாவளி பண்டிகையின் போது போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இயக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பயணிகளின் எளிதான பயணத்திற்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள் 5 இடங்களில் இருந்து இயக்கப்பட்டன. இந்தத் திட்டம் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றதால் பொங்கல் பண்டிகைக்கும் அதே முறையை செயல்படுத்த போக்குவரத்து கழகம் முடிவு செய்தது.
பொங்கல் பண்டிகையை 14-ஆம் தேதி கொண்டாடும் வகையில் 11, 12, 13 ஆகிய 3 நாள்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னையில் இருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள், மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு செல்ல தினமும் இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன் கூடுதலாக 11-ஆம் தேதியன்று 794 சிறப்பு பேருந்துகளும், 12-ஆம் தேதி 1,779 சிறப்பு பேருந்துகளும், 13-ஆம் தேதி 1872 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.
ஒட்டுமொத்தமாக 3 நாள்களும் சேர்த்து 11,270 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பிறகு மாநிலத்தின் பிற முக்கிய ஊர்களில் இருந்து 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை 6,423 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
விழாவுக்கு பிறகு... மேலும் பொங்கல் திருவிழா முடிந்து பொதுமக்கள் சென்னை, பிற பகுதிகளுக்கு திரும்பும் வகையில் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை 3 நாள்கள் சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளது. அவை தினசரி சென்னைக்கு பிற பகுதிகளில் இருந்து இயக்கப்பட்டு வரும் 2,275 பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளாக இயக்கப்பட உள்ளது. 15-ஆம் தேதி பிற பகுதியில் இருந்து சென்னைக்கு 1,130 சிறப்பு பேருந்துகளும், 16-ஆம் தேதி பிற பகுதியில் இருந்து சென்னைக்கு 1,520 சிறப்பு பேருந்துகளும், 17-ஆம் தேதி பிற பகுதிகளில் இருந்து சென்னைக்கு 1,002 சிறப்பு பேருந்துகள் என 3 நாள்களிலும் மொத்தம் 3,658 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சென்னை அல்லாத பிற பகுதிகளில் மாநிலத்தின் பிற ஊர்களில் இருந்து (சென்னை அல்லாத பிற பகுதிகள்) 15-ஆம் தேதி 1865 சிறப்பு பேருந்துகளும், 16-ஆம் தேதி 3070 சிறப்பு பஸ்கள், 17-ஆம் தேதி 2141 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 7,076 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...