இன்றைய கால கட்டத்தில் தொழில்நுட்பத்தின் உதவியால் பல்வேறு கருவிகள்
புதிதுபுதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ உலகிலும் பல்வேறு
தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாம் விடும்
மூச்சில் 17 நோய்களை கண்டறியும் வகையில் புதிய கருவி ஒன்றை மருத்துவ
விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
ஸ்டார் ஸ்ட்ரக் மூலம் ’நா-நோஸ்’ எனப்படும் நோய் கண்டறியும் கருவியை இஸ்ரேல் நாட்டு மருத்துவ நிபுணர்கள் உருவாக்கியுள்ளனர். சில வகையான புற்று நோய்கள் உள்பட 17 வகையான நோய்களை கண்டறியும் வகையில் இந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய நாட்டு மருத்துவ ஆராய்ச்சியாளர் ஹோசம் ஹெய்க் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ’நா-நோஸ்’ எனப்படும் கருவியை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
இந்த சுவாச ஆய்வுக் கருவிக்குள் தங்கம் மிக நுண்ணியத் துகள்களாக, கார்பன் வேதிப்பொருளால் செய்யப்பட்ட நுண்ணியக் குழாய்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இவை இரண்டையும் AI என்ற சாப்ட்வேர் கட்டுப்படுத்தி இயக்குகிறது.
நோயாளி வெளிவிடும் சுவாசக்காற்றில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வேதிப்பொருள்களை 'நா-நோஸ்' கருவி துல்லியமாகக் கண்டுபிடிக்கும்.
இந்த கருவியை சோதனை அடிப்படையில் இஸ்ரேல், பிரான்ஸ், லாட்வியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் 1404 நோயாளிகளின் 2800 மூச்சுகளை ஹெய்க் மருத்துவ ஆராய்ச்சிக் குழுவினர் எடுத்துள்ளனர்.
நரம்பியல் குறைபாடு, புற்றுநோய், ரத்தக்குழாய் வீக்கம் உள்ளிட்ட 17 வகையான நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களின் மூச்சுக்காற்று ஆய்வுக்காக எடுக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் எடுக்கப்பட்ட மூச்சுக்காற்றை பரிசோதித்ததில் பத்தில் ஒன்பது தடவை அந்த நோயாளிக்கு உள்ள நோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து மருத்துவ ஆராய்ச்சியாளர் ஹோசம் ஹெய்க்
“ஒரே கருவி மூலம் உடம்பில் ஏற்படும் 17 வகையான நோய்களை கண்டுபிடிக்கும் வகையில், 'நா-நோஸ்' எனப்படும் ஆய்வுக் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
மேலும், நம் அனைவரது கைரேகைகளும் தனித்தனி தன்மை வாய்ந்தவை. அதுபோல, இந்த கருவி மூலம் நாங்கள் கண்டறிந்துள்ள அனைத்து வியாதிக்கும் வெவ்வேறு மாதிரியான சுவாச தடயங்கள் உள்ளன. அது வேதியல் கூறுகளின் அடையாளமாக இருக்கிறது. அவற்றுக்கிடையேயான வேறுபாடுகளை கண்டறிவதற்கான கருவிதான் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...