சமூக வலைத்தளங்களில் முக்கிய செயலியான வாட்ஸ் ஆப்-இல் ஒரே நாளில் 1,400 கோடி தகவல்கள் பகிரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் இந்தியாவில்தான் அதிக அளவு வாட்ஸ் ஆப் பயன்பாடு உள்ளதாக
கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 31ம் தேதி இந்தியாவில் வாட்ஸப்
மூலம் 1400 கோடி புத்தாண்டு வாழ்த்துகள் பரிமாறப்பட்டுள்ளதாக வாட்ஸப்
நிர்வாகம் தெரிவித்துள்ளது..
இதுகுறித்து வாட்ஸப் நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது: 2017 புத்தாண்டின் முந்தைய நாளான டிசம்பர்-31ஆம் தேதி மாலை வாட்ஸ் ஆப் மூலம் 1,400 கோடி தகவல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 32% தகவல்கள் புகைப்படங்களாகவும், ஜி.ஐ.எப். ரக படங்களாகவும், குரல் பதிவு தகவல்களாகவும் பகிரப்பட்டுள்ளது. அதாவது சுமார் 301 கோடி புகைப்படங்களும், 70 கோடி ஜிஐஎப் புகைப் படங்களும், 61 கோடி வீடியோ வாழ்த்துச் செய்திகளும் அனுப்பப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு தற்போதுதான் அதிகமாக தகவல் அதிகமாக பகிரப்பட்டுள்ளது.
இதற்கு முன் கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாளில் வாழ்த்துகளை தெரிவிப்பதற்காக 800 கோடி தகவல்கள் பகிரப்பட்டது என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்தது. இந்தியாவில் 16 கோடி பேருக்கும் அதிகமானவர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...