பெட்ரோல் நிலையங்களில் ஜனவரி 13-ஆம் தேதிக்குப் பிறகும் பொதுமக்கள் டெபிட்,
கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.
முன்னதாக, கார்டுகள் மூலம் வசூலிக்கப்படும் பணத்துக்கு 1 சதவீத பரிவர்த்தனைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற வங்கிகளின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இனி கார்டுகளை ஏற்பது இல்லை என்று பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. ஆனால், மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுத்ததையடுத்து ஜனவரி 13-ஆம் தேதி வரை கார்டுகளை ஏற்றுக் கொள்வதாக அன்றைய தினமே அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தில்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்தித்துப் பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வழிகாட்டுதலின்படிதான் புதிய கட்டணம் வசூலிப்பது தொடர்பான அறிவிப்பை வங்கிகள் வெளியிட்டன. எனினும், இதனை ஏற்பது பெட்ரோலிய விற்பனை நிறுவனங்களா அல்லது வங்கிகளா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல் நிலையங்களை நடத்துபவர்கள் மீது இந்த புதிய கட்டணம் சுமத்தப்பட்ட மாட்டாது என்று ஏற்கெனவே உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதேபோல பொதுமக்கள் மீது இந்த வரி சுமத்தப்பட மாட்டாது. எனவே, ஜனவரி 13-ஆம் தேதிக்குப் பிறகும் பெட்ரோல் நிலையங்களில் கார்டுகளைப் பயன்படுத்தலாம். கார்டுகள் மூலம் கண்டிப்பாக பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என்று பெட்ரோலிய விற்பனை நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. எனவே, பெட்ரோல் நிலையங்களில் மின்னணு முறையில் ரொக்கமற்ற பணப் பரிமாற்றம் செய்யும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 0.75 சதவீத தள்ளுபடியும் தொடரும் என்றார் அவர்.
முன்னதாக, உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையை அதிகரிக்கும் நோக்கில், கார்டுகள் மூலமும், மின்னணு முறையிலும் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்பவர்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அளித்தது. இதில் முக்கியமாக பெட்ரோல் நிலையங்களில் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தினால், சிறிய அளவில் தள்ளுபடியும் அளிக்கப்பட்டது.

இதனிடையே, கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் பெட்ரோல் நிலையங்களிடம் இருந்து 1 சதவீத பரிவர்த்தனை வரி வசூலிக்கப்படும் என்று வங்கிகள் சுற்றரிக்கை வெளியிட்டன.
இதையடுத்து, கார்டுகளை ஏற்க மாட்டோம் என்று பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுத்து, பெட்ரோல் விற்பனையாளர்களிடம் பரிவர்த்தனை வரி வசூலிக்கப்பட மாட்டாது என்று அறிவித்தது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...