ஈரோடு, ''பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால், உரிமம் இல்லாத
கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்படும்; உரிமம் இருப்பின் ரத்து செய்யப்படும்,''
என, ஈரோடு கலெக்டர் பிரபாகர் எச்சரித்துள்ளார்.
ஈரோட்டில், வங்கி பணப்
பரிவர்த்தனை தொடர்பாக வங்கியாளர்கள் மற்றும் வணிகர்களுடன் ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:
ஈரோடு மாவட்ட கடைகளில்,10 ரூபாய் நாணயம் வாங்க மறுக்கின்றனர் என,
பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வருகின்றன. ஏற்கனவே, 10 ரூபாய்
நாணயங்கள் செல்லும் என, ரிசர்வ் வங்கி நிர்வாகம், ஈரோடு மாவட்ட நிர்வாகம்
அறிவித்துள்ளன. வரும் நாட்களில், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால்,
கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அந்நிறுவனத்துக்கான உரிமங்கள்
ரத்துசெய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
Salemla entha buslayum kadailayur banks may aka ranks ithuku entha arasun nadavadikai edukalla
ReplyDelete