கார், வேன், லாரி என வாகனங்களில் பல புதுமையான தொழில்நுட்பங்களை அதன்
நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வரும் நிலையில் அவ்வப்போது ரயில்
தயாரிப்பிலும் புது தொழில்நுட்பங்களை புகுத்தி தயாரிப்பது உண்டு. அதன்
வரிசையில் தற்போது தென்கொரியா அரசுடன் புகழ் பெற்ற டெஸ்லா
நிறுவனம் இணைந்து 1000 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயிலை தயாரிக்கும் திட்டத்தில் ஒப்பந்தம் போட்டுள்ளனர்.
80 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் தயாராகவுள்ள, இந்த ரயில் அமைக்கும் திட்டமானது தற்போது தொடங்கி இன்னும் 4 முதல் 6 ஆண்டுக்குள் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, சீனா போன்ற நாடுகள் எதிர்கால தொழில்நுட்பத்தை நாடி சென்றுகொண்டிருக்கும் நிலையில் தென்கொரியாவும் அதில் இணைந்துள்ளது.
1000 கி.மீ. வேகத்தில் செல்லும்போது தண்டவாளம் உடையாமல் இருப்பதற்கு வலுவான ரயில் பாதை, ரயில் கட்டுமானம் ஆகியவை உட்படுத்தவுள்ளனர். இதன்மூலம் உலகின் அதிவேக ரயில் மட்டுமின்றி வலுவான ரயில் என்ற பெருமையும் இந்த ரயிலுக்கு கிடைக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...