வருமான வரி வரம்புக்குள் வராதவர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் அதிநவீன
செல்லிடப்பேசிகள் (ஸ்மார்ட் ஃபோன்) வாங்கும்போது மானியமாக ரூ.1,000 வழங்க
வேண்டும் என்று மத்திய அரசிடம் மாநில முதல்வர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
சிறு வியாபாரிகள் வங்கிகளுக்குச் செலுத்தும் மின்னணு பரிவர்த்தனைக் கட்டணத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்றும் அக்குழு அறிவுறுத்தியுள்ளது.
சிறு வியாபாரிகள் வங்கிகளுக்குச் செலுத்தும் மின்னணு பரிவர்த்தனைக் கட்டணத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்றும் அக்குழு அறிவுறுத்தியுள்ளது.
மின்ணணு பரிவர்த்தனையை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை ஆந்திர முதல்வர்
சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், மத்தியப்
பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் ஆகியோர் அடங்கிய முதல்வர்கள் குழு,
பிரதமர் மோடியிடம் செவ்வாய்க்கிழமை வழங்கியது. அந்தப் பரிந்துரைகளில்
இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு: பற்று அட்டை (டெபிட் கார்டு)
அல்லது கடன் அட்டை (கிரெடிட் கார்டு) மூலம் வாடிக்கையாளர்கள் பணம்
செலுத்தும்போது, மின்னணு பரிவர்த்தனைக் கட்டணமாக குறிப்பிட்ட தொகையை
வங்கிகளுக்கு வியாபாரிகள் செலுத்த வேண்டியுள்ளது.
இந்தக் கட்டணத்தை முற்றிலும் ரத்து செய்யவோ அல்லது மிகக் குறைந்த அளவில் நிர்ணயிக்கவோ மத்திய அரசு முன்வர வேண்டும்.
ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் வியாபாரிகளுக்கு முன்தேதியிட்டு வரி விதிக்கக் கூடாது. அதேபோன்று புதிய வரிவிதிப்புகளையும் அமல்படுத்தக் கூடாது.
ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் வியாபாரிகளுக்கு முன்தேதியிட்டு வரி விதிக்கக் கூடாது. அதேபோன்று புதிய வரிவிதிப்புகளையும் அமல்படுத்தக் கூடாது.
குறைந்த வருமானம் உள்ளவர்கள், அதிக அளவில் மின்னணு பரிவர்த்தனைகளை
மேற்கொண்டால் அவர்கள் செலுத்திய வருமான வரித் தொகையில் ஒரு பகுதியை
திருப்பி வழங்க வேண்டும்.
கை விரல் ரேகை, கருவிழிப் படலம் உள்ளிட்ட ஆதார் விவரங்களின் அடிப்படையில்
மின்னணு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். ரூ.50,000-க்கும்
அதிகமாக வங்கிகளில் இருந்து பணம் எடுப்பவர்களுக்கு பரிவர்த்தனைக் கட்டணம்
விதிப்பது அவசியம்.
வருமான வரி வரம்புக்குள் வராதவர்களும், சிறு வியாபாரிகளும் ஸ்மார்ட் செல்லிடப்பேசிகளை வாங்கும்போது ரூ.1,000 மானியமாக வழங்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளின் வாயிலாக ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனையை மேம்படுத்த முடியும் என்று முதல்வர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

பட்ஜெட்டில் சலுகைகள்: இதனிடையே, அடுத்த நிதியாண்டுக்கான (2017-18) மத்திய
பட்ஜெட்டில், மின்னணு பரிவர்த்தனையை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை
அறிவிக்கலாம் எனத் தெரிகிறது.
மின்னணு பரிவர்த்தனை இயந்திரங்கள், கையடக்க பணப் பட்டுவாடா இயந்திரங்கள்,
கை விரல் ரேகை பரிவர்த்தனை சாதனங்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும்
நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பாகவும், கலால் வரியைக்
குறைப்பது குறித்தும் அறிவிப்புகள் வெளியாகலாம் என்று மத்திய அரசு
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...