ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனைக்கான "பீம்' செயலி அறிமுகப்படுத்தப்பட்ட 10 நாள்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் அதைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
பிரதமர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களிடையே ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் உள்நாட்டில் வடிமைக்கப்பட்ட இந்தச் செயலியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி அறிமுகப்படுத்தினார்.
சட்ட மேதை பீம ராவ் அம்பேத்கரின் நினைவாக இந்தச் செயலிக்கு பீம் எனப் பெயரிடப்பட்டது.
ஆதார் எண் மற்றும் பயன்படுத்துபவரின் கைவிரல் ரேகைப்பதிவு ஆகியவற்றின் மூலம் மிகவும் பாதுகாப்பான ரொக்கமற்ற பணப் பரிமாற்றத்தை இந்தச் செயலி மூலம் மேற்கொள்ள முடியும்.
மேலும், பரிமாற்றம் எளிதாகவும், விரைவாகவும் நடைபெறும். இதனால் இளைஞர்கள், வர்த்தகர்கள் மத்தியில் இந்தச் செயலி குறுகிய நாள்களில் மிகவும் பிரபலமாகவிட்டது.
ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ள செல்லிடப்பேசிகளில் "கூகுள் பிளே ஸ்டோரில்' இருந்து இச்செயலியைப் பதிவிறக்கம் செய்ய முடியும். இப்போது ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டும் பயன்படுத்தும் வசதி இதில் உள்ளது. விரைவில் பிற மாநில மொழிகளும் சேர்க்கப்படவுள்ளன.

இந்திய தேசிய செலுத்துகை நிறுவனம் பிரத்யேகமாக உருவாக்கிய யுபிஐ தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், பரிமாற்றங்களை வேகமாகவும், எளிதாகவும் மேற்கொள்ள முடிகிறது.
இதில் மேற்கொள்ளப்படும் பணப் பரிமாற்றத்துக்கு கட்டணம் ஏதும் கிடையாது. ஆனால், வங்கிகள் அவற்றின் விதிகளுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க வாய்ப்பு உள்ளது.
வங்கிக் கணக்கும், ஆதார் எண்ணும் உள்ள அனைவரும் இதனைப் பயன்படுத்த முடியும் என்பது சிறப்பம்சமாகும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...