TNPSC VAO பணிக்கான கலந்தாய்வுஅறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் 2014-2015 பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.19/2015, நாள் 12.11.2015 வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 28.02.2016 முற்பகல் அன்று நடைபெற்றது. அதற்கான தெரிவு முடிவுகள் 01.07.2016 அன்று வெளியிடப்பட்டது. இத்தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 01.08.2016 முதல் 08.08.2016 வரை நடைபெற்றது. இத்தெரிவிற்கான கலந்தாய்வு சென்னை–600003, பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 19.12.2016 முதல் 23.12.2016 நடைபெறுகிறது. கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவெண் பட்டியல் மற்றும் தரவரிசையின்படி கால அட்டவணைப் பட்டியல் தேர்வாணைய இணையத் தளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு அழைப்பாணை விரைவஞ்சல் மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணையினை தேர்வாணைய இணையத் தளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இவ்விவரங்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நடைபெற உள்ள கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர். எனவே, அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. விண்ணப்பதாரர்கள் கலந்தாய்விற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. மா. விஜயகுமார், இ.ஆ.ப., செயலாளர்The Tamil Nadu Public Service Commission in its Notification No.19/2015, dated 12.11.2015 had invited applications for selection of candidate for appointment by direct recruitment to the post of Village Administrative Officer 2014-2015. The Written Examination was held on 28.02.2016 FN and results were published on 01.07.2016. The certificate verification for the said rectt was held from 01.08.2016 to 08.08.2016. The counselling for this recruitment is scheduled to be held from 19.12.2016 to 23.12.2016 at the o/o. Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, VOC Nagar, Chennai – 600 003. (Near Broadway Bus Stand/Fort Railway Station). 2. The schedule for the counselling along with the list of candidates who have been provisionally admitted for the Counselling has been hosted in the Commission's Website. The intimation memos are sent to the candidates individually by speed post about the date and time of the Counselling. The same may be downloaded from the Commission's website (www.tnpsc.gov.in) The candidates have also been informed about the date, time and venue of the counselling by means of SMS and E-mail also. 3. Candidates are admitted to the Counselling based on the marks obtained by them in the Written Examination, claims made by them in their On-line applications and their admission for counselling is subject to availability of vacancies in their respective reservation categories as per their rank and rule of reservation of appointments. 4. The candidates who have been admitted for Counselling are directed to present themselves as mentioned in the Counselling Schedule. Candidates who do not appear for Counselling on the date and time allotted to them will lose his/her opportunity, and they will not given any further chance to appear for the same. M.VijayaKumar I.A.S., Secretary இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதுHalf Yearly Exam 2024
Latest Updates
Home »
» TNPSC Vao Counselling for 2014-15 Announced Now
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...