Lதமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் நியமனம் செய்யப்பட்ட பகுதிநேர
ஆசிரியர்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முறைகேடாக நியமனம் செய்யப்படுள்ளனர் என புகார் வந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஓவியம், தையல், இசை, உடற்கல்வி, கம்ப்யூட்டர், தோட்டக்கலை ஆகிய பாடப்பிரிவுகளில் 16,549 சிறப்பாசிரியர்கள் பகுதி நேரத்தில் பணியில் நியமிக்கப்பட்டனர்.
அவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தேர்வுச் செய்யப்பட்டனர். பகுதி நேர ஆசிரியர்கள் வாரத்தில் 3 அரை நாட்கள் பள்ளியில் பணியாற்ற வேண்டும் என்ற விதிமுறைப்படி, தொகுப்பூதியத்தில் மாதம் 5 ஆயிரம் சம்பளத்தில் நியமனம் செய்யப்பட்டனர். பின்னர் 2 ஆயிரம் சம்பள உயர்வு அளிக்கப்பட்ட, தற்பொழுது பணிபுரிந்து வருகின்றனர்.
இது குறித்து கலை ஆசிரியர் நலச்சங்க மாநிலத்தலைவர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,தமிழகம் முழுவதும் கடந்த 2012ம் ஆண்டு ஓவியம், தையல், இசை, உடற்கல்வி,கம்ப்யூட்டர்,தோட்டக்கலை உள்ளிட்ட பாடப்பிரிவிற்கு 16549 பேர் நியமனம் செய்யப்பட்டனர். இப்பணி இடங்களில் ஓவிய ஆசிரியர் பணி இடத்திற்கு டி.டி.சி. எனப்படும் தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சியானது அரசு பள்ளி ஆசிரியர் பணி இடத்திற்கு முக்கியத்துவம் ஆகும்.
ஆனால் ஆசிரியர் பயிற்சி முடிக்காத பலருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.இவை பற்றி ஒவ்வொரு மாவட்ட கல்வி அலுவலர்களும் விசாரணை நடத்தினால் தமிழகம் முழுவதும் 2000க்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நிரப்பட்ட 146 ஓவியம், தையல், இசை ஆசிரியர் பணி இடத்தில் மட்டும் ஆசிரியர் பயிற்சி முடிக்காதவர்கள் 22 பேர் உள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்ட பகுதி நேர ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட்ட 1164
ஓவியம், தையல், இசை ஆசிரியர் பணி இடங்களில் ஆசிரியர் பயிற்சி முடிக்காதவர்கள் 217 பேர் உள்ளதாக தகவல் தெரிய வருகிறது.
இதேபோல் கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி இடத்தில் பி.எட். முடிக்காதவர்களுக்கும் பணி இடம் வழங்கப்பட்டுள்ளது. உடற்கல்வி ஆசிரியர் பணி இடத்தில் வேலை வாய்ப்பு அலுவலக முன்னுரிமையில் உள்ள பலருக்கு நியமனம் வழங்கப்படவில்லை.
நியமனம் வழங்கப்படாத திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த ஓவிய ஆசிரியர் துரைராஜ் 1992 ல் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளதாகவும் தனது பெயரை புறக்கணித்துவிட்டு ஆசிரியர் பயிற்சியே முடிக்காத பலருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது என 4.7.2016 அன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.இதனடிப்படையில் கலை ஆசிரியர் நலச்சங்கம் மூலம் ஆய்வு செய்தபோது தமிழகம் முழுவதும் முறைகேடாக ஆசிரியர் பயிற்சி முடிக்காத பலருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.
இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பகுதியை சேர்ந்த சுசிலா என்ற பெண் ஆசிரியர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர் கணேஷ்மூர்த்தியிடம் புகார் செய்துள்ளார். அதில் தையல் ஆசிரியர் பணி இடத்தில் ஆசிரியர் பயிற்சி முடிக்காத பலருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார். தற்போது பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் வேண்டி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். முறைகேடாக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பற்றி அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் உடனடி ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆசிரியர் பயிற்சியே முடிக்காமல் நியமனம் பெற்ற பகுதிநேர ஆசிரியர்களில் சிலரின் பெயர் விவரம் வருமாறு, நீலகிரி மாவட்டத்தில் ஒவிய ஆசிரியர் பத்மகுமார், முதலில் நியமனம் பெற்ற பள்ளி நடுவட்டம்,அரசு உயர்நிலைப்பள்ளியிலும், பணிநிரவல் மூலம் தற்பொழுது பணியாற்றம் பள்ளி, பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி தேவாலா, கூடலூரில் பணிபுரிகிறார்.
ரமீதா, முதலில் நியமனம் பெற்ற பள்ளி,அரசு மேல்நிலைப்பள்ளி (தையல் ஆசிரியர்) உபதலை, குன்னூர், தற்பொழுது பணியாற்றும் பள்ளி, ஆதிதிராவிடர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி, குஞ்சப்பனை (கோத்தகிரி). பிரேம்குமார், முதலில் நியமனம் பெற்ற பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, தும்மனட்டி (இசை ஆசிரியர்)
அதேபோல் கோவை மாவட்டத்தில் அப்பாதுரை, அரசு உயர்நிலைப்பள்ளி சோலையார்டேம் வால்பாறை, கோயம்புத்தூர் ( ஓவிய ஆசிரியர் ), தட்சிணாமூர்த்தி, அரசு உயர்நிலைப்பள்ளி, கோட்டூர்,ஆனைமலை, கோயம்புத்தூர் (ஓவிய ஆசிரியர்), என ஒருசிலர் முறைகேடாக நியமனம் பெற்று பணியாற்றும் பள்ளி முகவரியுடன் சேகரித்து வெளியிட்டுள்ளோம். இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்கள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...