மேஷம்
புதிய
பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு
அதிகமாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்-.
சில வேலைகளை விட்டுக்
கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக
ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
ரிஷபம்
மதியம்
12.45 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள்.
பிள்ளைகளின் வருங்காலம் குறித்து அதிகம் யோசிப்பீர்கள். சிலவற்றிற்கு
உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில்
பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
மிதுனம்
குடும்பத்தில்
ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள்.
உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும்.
உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மதியம் 12.45 மணி முதல் சந்திராஷ்டமம்
தொடங்குவதால் எதிலும் முன்எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
கடகம்
கனிவானப்
பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். விசேஷங்களை
முன்னின்று நடத்துவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள்
அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
சிம்மம்
மற்றவர்களை
நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள்.
உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக
ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
கன்னி
நண்பர்கள்
ஒத்துழைப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய
கடனை தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.
வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை
தாண்டி முன்னேறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
துலாம்
சவாலில்
வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில்
அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில்
பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு
நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
விருச்சிகம்
சோர்வு
நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சொந்த-பந்தங்கள்
மதிப்பார்கள். முகப்பொலிவுக் கூடும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம்
உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக
ஊழியர்கள் மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
தனுசு
மதியம்
12.45 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள்.
தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள்.
எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.
உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், பிங்க்
மகரம்
எடுத்த
வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள்
வரும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரம்,
உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம்.
மதியம் 12.45 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் கவனமுடன்
செயல்பட பாருங்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, ரோஸ்
கும்பம்
குடும்பத்தினருடன்
சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பணம் வரும். நட்பு வழியில் நல்ல
செய்தி கேட்பீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து
ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில்
மேலதிபாரி பாராட்டுவார்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம் வெள்ளை
மீனம்
உணர்ச்சிப்பூர்வமாகப்
பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள்
எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில்
புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில
சூட்சுமங்களை சொல்லித் தருவார்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...