Paytm வாலட் மூலமான பண பரிவர்த்தனைக்கு எஸ்.பி.ஐ தடை விதித்துள்ளது*.
எஸ்.பி.ஐ. வங்கி கணக்கு உள்ளவர்கள், Paytm-ல் பரிவர்த்தனை செய்ய முடியாமல்
தவித்தனர். இதுகுறித்து எஸ்.பி.ஐ ட்விட்டரில், 'Paytm மூலமான பரிவர்த்தனை
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக State Bank Buddy mobile ஆப்பை
பயன்படுத்துங்கள்' எனக்கூறியுள்ளது. இதனால் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். சில வாடிக்கையாளர்கள், Paytm அளவுக்கு உங்களது ஆப்பை முன்னேற்றி விட்டு பின், இந்த நடவடிக்கையை எடுங்கள் எனக்கூறியுள்ளனர்.
இந்நிலையில் Paytm நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா, எஸ்.பி.ஐ. தங்களது ஆப்பை பிரபலப்படுத்தவே, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், எஸ்.பி.ஐ. வங்கியின் கிளை ஒன்றின் முன் Paytm மற்றும் *State Bank Buddy mobile*ஆப் இரண்டையும் ஒப்பிட்டு, வைக்கப்பட்ட விளம்பரம் ஒன்றின் படத்தையும் அவர் ஷேர் செய்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...