தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அளிக்கும் அளவில்லா இணையச் சேவையை அனுபவிப்பதற்காக ஜியோ 4ஜி சிம்கார்டை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏனென்றால் வரும் டிசம்பர் வரை இலவச இணையச் சேவை மற்றும் அழைப்புகளை அளிக்கிறது. அதன் பின் 1ஜிபி டேட்டாவை ரூ. 25க்கு வழங்கவும் இந்நிறுவனம் பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில் 3ஜி பயன்பாடு செல்போன்களில், ஜியோ 4ஜி சிம்கார்டு பொருந்தாத நிலையுள்ளதால் ஜியோவின் 4ஜி இணையச் சேவையைப் பெற இயலாது. ஆனால் இதற்கும் மாற்றாக, தற்போது இந்நிறுவனம் ஜியோ ஃபை ரூட்டர் என்ற பாக்கெட் அளவிலான கருவியை வெளியிட்டுள்ளது. இக்கருவியில் ஹாட்ஸ்பாட் வைபை மூலம் அளிக்கப்படும் இணைய அலைவரிசையை இதர செல்போன்கள், லேப்டாப், டேப்லெட், கணினிகளில் வைபை மூலம் பெறலாம். (வைபை வசதி இல்லாத கணினிகளில் இந்த வசதியைப் பெற ரூ. 300 க்கு கிடைக்கும் வைபை ரிசீவர் அடாப்டர் என்ற சிறிய கருவியை யுஎஸ்பி டிரைவில் பொருத்தலாம்).
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ஹாட்ஸ்பாட் வைபை மூலம் கிடைக்கும் இந்த இணையச் சேவையை ஒரே சமயத்தில் 10 பேர் உபயோகித்தாலும் இதன் வேகம் குறைவதில்லை எனத் தெரிவித்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்.
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் கார்டு பொருத்தப்பட்ட இக்கருவியை ரிலையன்ஸ் டிஜிட்டல் ஷோரூம்களில், தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து பெறலாம்.
Now itself many of them like that only using ...
ReplyDeleteJio wifi router
ReplyDeletePrice Rs 1990/=
Reciever adopter தான் 300/=