அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட சம்பள பணம் 18 ஆயிரம் கோடி
ரூபாய் எந்த கணக்கில் உள்ளது, என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கேள்வி
எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலர் கிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் மெய்யப்பன் ஆகியோர் ராமநாதபுரத்தில் கூறியதாவது: தலைமை செயலகம், சட்டசபை உள்பட 143 அரசு துறைகள் தமிழகத்தில் உள்ளன. இவற்றில் 6,49,201 நிரந்தரம், 4,12, 214 தற்காலிக ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிபடி புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அரசுத்துறைகளை தனியார்மயமாக்கும் போக்கை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்.
கடந்த 2003 ஏப்., 1 முதல் ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட சம்பள பணம் 18 ஆயிரம் கோடி ரூபாய் எந்த கணக்கில் உள்ளது என்பதை அரசு தெளிவுபடுத்தவேண்டும். எட்டாவது ஊதியக்குழு அமைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம், இதர சலுகைகள் வழங்க வேண்டும். 15 ஆண்டுகளுக்கு மேலாக அரசு துறைகளில் காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊரக நுாலகர்களுக்கு வறையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்பட இதர தொகுப்பூதிய பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...