தமிழகத்தில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 900 பெண் குழந்தைகள் மட்டும்தான்
இருக்கிறார்கள்.
இது, பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை
சுட்டிக்காட்டுகிறது. இந்நிலையில், ‘சிசுக் கொலைகளை ஒழிக்க தமிழ்நாடு
மருத்துவக் கவுன்சிலும், தமிழ்நாடு
சுகாதாரத்துறையும் இணைந்து செயல்பட வேண்டும்’ என்று உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
முறைகேடாக ஸ்கேன் மையம் நடத்தி வந்ததாக கூறி கடலூரைச் சேர்ந்த ராமசந்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து, ராமசந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு, நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘சிசுக் கொலை சம்பந்தமான சட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். சிசுக் கொலையை தடுக்க தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலும், தமிழ்நாடு சுகாதாரத்துறையும் இணைந்து செயல்பட வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார். மேலும், ‘கடந்த பத்தாண்டு காலங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஸ்கேன் மையங்கள் மற்றும் அவற்றில் நடக்கின்ற முறைகேடுகள் குறித்த நடவடிக்கை குறித்தும் அறிக்கை சமர்பிக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து, அனைத்து ஸ்கேன் மையங்களை கண்காணிக்க மாவட்ட வாரியாக நான்கு அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும்,முறைகேடு குறித்து நடவடிக்கை அவ்வப்போது எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு சார்பில் அறிக்கை கூறப்பட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘ஸ்கேன் மையங்களில் முறைகேடுகள் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...