உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறும் முடிவை எடுப்பது தொடர்பாக
நடைபெற்ற உயர்மட்ட கூட்டங்களில் விவாதிக்கப்பட்டவை குறித்து தகவல் அறியும்
உரிமைச் சட்டத்தின்கீழ் (ஆர்டிஐ) கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ரிசர்வ் வங்கி
பதிலளிக்க மறுத்துவிட்டது.
நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 ஆகிய உயர்மதிப்பு
ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த
மாதம் 8-ஆம் தேதி அறிவித்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ்
வெங்கடேஷ் நாயக் என்பவர் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அதாவது, உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குநர்கள் குழுக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டவை குறித்து கேட்டிருந்தார்.
ஆனால், இந்த கேள்விகளுக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 8(1)(ஏ) பிரிவை சுட்டிக்காட்டி, ரிசர்வ் வங்கி பதிலளிக்க மறுத்துவிட்டது.
அதாவது அந்த சட்டப்பிரிவில், நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்பு ஆகிய விவகாரங்களுக்கும், அறிவியல் அல்லது பொருளாதார நலன்கள் மற்றும் வெளிநாடுகளுடனான உறவில் பாதிப்பு ஏற்படுத்தும் விவரங்களை வெளியிடத் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதைச் சுட்டிக்காட்டி, ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குநர்கள் குழு கூட்டங்களில் விவாதிக்கப்பட்ட விவரங்களை வெளியிட ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது.
மேல்முறையீடு செய்ய மனுதாரர் முடிவு: இதனிடையே, மனுதாரர் வெங்கடேஷ் நாயக் கூறியபோது, ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ரிசர்வ் வங்கி பதிலளிக்காததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவது தொடர்பான முடிவை செயல்படுத்துவதற்கு முன்பு, அதுதொடர்பான விவரத்தை ரகசியமாக வைத்திருப்பது என்பதில் நியாயமுள்ளது; ஆனால், அந்த முடிவு செயல்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பணத் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வரும் நிலையில், அந்த விவரத்தை வெளியிடாமல் ரகசியம் காப்பதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை' என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...