அரசியல் கட்சிகளுக்கான வருமான வரி விலக்கை ரத்து செய்யக்கோரி சுப்ரீம்
கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
அரசியல் கட்சிகளின் வருமானத்துக்கு
வரி விலக்கு அளிக்கும் சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாக்கல்
செய்யப்பட்டு உள்ளது.சமீப காலமாக தேர்தல்களின்போது கருப்பு பணம்
தாராளமாக விளையாடுகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக அரசியல் கட்சிகள் பெயர் தெரிவிக்காதவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்துக்கு மேல் நிதியாக நன்கொடை பெறுவதற்கு தடை விதித்து சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் சிபாரிசு செய்துள்ளது. மேலும், சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெறுகிற அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.கருப்பு பணத்தை ஒடுக்குவதற்கு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் மற்றொரு பரிந்துரையையும் செய்துள்ளது. அது, அரசியல் கட்சிகள் கூப்பன் வெளியிட்டு பெறுகிற நன்கொடைகள் தொடர்பான தகவல்களை சுப்ரீம் கோர்ட்டின் 1996–ம் ஆண்டு உத்தரவின்படி பதிவு செய்வதை சட்ட அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருப்பதாகும்.வருமான வரி சட்டம் பிரிவு 13–ஏ, அரசியல் கட்சிகளுக்கு வீடு போன்ற சொத்துகள், நன்கொடைகள், மூலதன வருவாய்கள், பிற இனங்களில் வருகிற வருவாய் போன்றவற்றுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விதிவிலக்கு வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இந்நிலையில் அரசியல் கட்சிகளுக்கான வருமான வரி விலக்கை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.டெல்லியை சேர்ந்த வக்கீல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள மனுவில், அரசியல் கட்சிகளுக்கு அவைகளின் சொத்துகள் மூலமும், நன்கொடைகள் மூலமும், முதலீடுகளில் இருந்து வரும் லாபம் மூலமும் மற்றும் இதர பல வகைகளிலும் வருமானம் வருகிறது. அரசியல் கட்சிகளின் இந்த வருமானத்துக்கு வருமான வரி சட்டத்தில் பிரிவு 13(ஏ)ன்படி வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த சட்டப்பிரிவு அரசியல் சட்டத்துக்கு எதிரானதும், தன்னிச்சையானதும், சூது நிறைந்ததும் ஆகும். அதோடு இந்திய மக்களின் விருப்பத்துக்கு எதிரானது. எனவே அரசியல் கட்சிகளின் வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கும் அந்த சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. இந்த மனு 23- ந் தேதி சிறப்பு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வரும் என தெரிகிறது.மேலும், கள்ளத்தனமாக நிதி பெற்ற அரசியல் கட்சிகளின் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 29 நீக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...