வீட்டில் இருந்தபடியே, நாம் செல்ல வேண்டிய இடத்தை கூகுள் மேப் மூலம்
அறிந்து கொள்ளும் வசதி இருப்பது அறிந்ததே.
அதை இன்னும் எளிமையாக்க
அருகிலுள்ள சாலையில் போக்குவரத்து நிலவரம் குறித்த தகவல்களை அளிக்க
புதியதாக ஒரு அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஐபோன்களிலுள்ள கூகுள் மேப் அப்ளிகேஷனில் ‘நியர் பை டிராஃபிக்’ என்ற புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த மேம்படுத்தப்பட்ட கூகுள் அப்ளிகேஷனில் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கூகுள் அப்ளிகேஷனை வைத்திருப்போர் சாலையில் சொல்லும்போது அருகிலுள்ள இடங்களின் போக்குவரத்து நிலவரம் என்ன என்பது நோட்டிஃபிகேஷன்களாக அதுவாகவே வந்துவிடும். போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள சாலை, குறைவாக உள்ள சாலை, மிதமாக உள்ள சாலை என பல்வேறு விதங்களில் சாலை போக்குவரத்து நிலவரங்கள் குறித்த தகவல்கள் நோட்டிஃபிகேஷன் என அனுப்பி விடும். இந்த புதிய அம்சம் ஏற்கனவே ஆண்ட்ராய்டு போன்களில் இருக்கிறது. தற்போது ஐபோன்களில் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...