செல்ஃபி அதிகம் எடுப்பது மனநோய் என்று அமெரிக்க மனநோய் மருத்துவக்கழகம்
அறிவித்துள்ளது.
அபாயமான இடங்களில் செல்ஃபி எடுத்து, ஃபேஸ்புக்கில் லைக்
வாங்க முயல்பவர்கள் அநேகம் பேர். செல்ஃபி எடுக்க முயன்று இறந்தவர்களின்
எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகம். இப்படி, அளவுக்கு அதிகமாக செல்ஃபி எடுக்கும் பழக்கமுடையவர்களின் சருமத்தில் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக சமீபத்தில் சரும நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஸ்மார்ட்போனின் ஆதிக்கம் அதிகரித்து வரும்நிலையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். காலை எழுவது முதல் இரவு உறங்கும் வரை ஒவ்வொரு அசைவுகளையும் செல்ஃபி எடுத்து, அதற்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள் மூலம் செல்ஃபி எடுப்பதினால் அதிகபட்ச ஒளி மற்றும் கதிர்வீச்சால் விரைவிலேயே முகச்சுருக்கம், தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள், முதிர்வான தோற்றம் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சருமம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்காக மருத்துவரைச் சந்திக்கும் நோயாளிகள் எந்தக் கையில் போனை வைத்து செல்ஃபி எடுக்கிறார்கள் என்பது முகத்தை வைத்தே கூற முடியும் என்கிறார்கள். முகத்தில் எந்த பக்கம் அதிக பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது என்பதை பார்த்தும் கண்டுபிடிக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் லினியா ஸ்கின் கிளினிக் மருத்துவர் சைமன் ஜோவாகி கூறுகையில், “ஸ்மார்ட்போன்களில் இருந்து வரும் புளூடூத் கதிர்வீச்சு உடலை பாதிக்கும் தன்மை கொண்டது. போனில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சு, தோலில் உள்ள மரபணுக்களை அழித்துவிடும் தன்மை கொண்டது. அதனால், விரைவில் தோல் வயதானவர்களுக்கு இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும். சுருக்கங்களை அதிகரித்துவிடும்” என்று தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...