புதிய தேசிய கல்வி வரைவு கொள்கையை டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் கமிட்டி
சமர்பித்த நிலையில், மீண்டும் புதிய குழு அமைக்க இருப்பதாக மத்திய அரசு
தெரிவித்துள்ளது.
தற்போதைய கல்வி அமைப்பில் சீர்திருத்தம்
மேற்கொள்வதற்காக, கடந்தாண்டு டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையிலான
கமிட்டியை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நியமித்தது.
இக்கமிட்டி, பல்வேறு ஆலோசனைக்கு பிறகு, புதிய கல்வி வரைவு கொள்கையை கடந்த
மே மாதம் சமர்ப்பித்தது. இதில் உள்ள பெரும்பாலான அம்சங்களுக்கு நாடு
முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், புதிய கல்வி வரைவு
கொள்கையை தயாரிக்க மீண்டும் ஒரு புதிய கமிட்டி அமைக்க இருப்பதாக மனித வள
மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று கூறி உள்ளார்.அவர் அளித்த
பேட்டியில்,
‘‘சிறந்த கல்வியாளர்கள் கொண்ட புதிய குழு இன்னும் 10 நாட்களில் அமைக்கப்படும். இதற்காக சிலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன’’ என்றார். சுப்பிரமணியன் கமிட்டியின் வரைவில், ‘‘நமது கல்வி முறையில் அடிப்படையிலேயே சில மாற்றங்கள் செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது. இவற்றை மேற்கொள்ள அரசுதயங்குவதாக ஏற்கனவே சுப்பிரமணியன் விமர்சித்திருந்தார். இதனால் புதிய குழு அமைக்கப்பட இருப்பதால் சுப்பிரமணியன் கமிட்டியின் பரிந்துரைகளை அரசு ஏற்காதா என அமைச்சரிடம் கேட்கப்பட்டதற்கு, ‘‘சுப்பிரமணியன் கமிட்டியின் பரிந்துரைகளும் ஏற்கப்படும். மேலும், அந்த கமிட்டியின் வரைவு கொள்கைகளையே இறுதி கொள்கையாக ஏற்க வேண்டுமென்ற கட்டாயமுமில்லை’’ என ஜவடேகர் கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...