தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளின் நிதி விவரங்களை ஆய்வு செய்ய திட்டம் வருமான வரித்துறைக்கு கடிதம் எழுத தேர்தல் ஆணையம் முடிவு.
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தும் அங்கீகாரம் பெறாமல் 1700-க்கும் அதிகமான அரசியல் கட்சிகள் உள்ளன. இதில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் இதுவரை எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடாத 200-க்கும் மேற்பட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன.
இந்த கட்சிகள் நன்கொடை என்ற பெயரில் பெரும் செல்வந்தவர்களிடம் இருந்து கருப்பு பணத்தை வசூலித்து, அதை மாற்றி கொடுக்கும் பணிகளில் ஈடுபடக்கூடும் என தேர்தல் ஆணையம் கருதுகிறது. அரசியல் கட்சிகளின் கணக்கில் செலுத்தப்படும் தொகைக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதால் இந்த மோசடிக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே இந்த நிதி மோசடியை தடுக்கும் வகையில் மேற்படி அரசியல் கட்சிகளின் நிதி விவரங்களை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக அடுத்த சில நாட்களில் வருமான வரித்துறைக்கு கடிதம் எழுத இருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...