வங்கியில் உள்ள பணத்தை இணையவழியில் (நெட் பேங்கிங்) பரிமாற்றம் செய்வதற்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை
ரத்து செய்யுமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ரத்து செய்யுமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) இப்போதைய விதிகளின்படி என்இஎஃப்டி முறையில் ரூ.10,000 வரையிலான பரிமாற்றத்துக்கு ரூ.2.50, ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரையிலான பரிமாற்றத்துக்கு ரூ.5, ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையிலான பரிமாற்றத்துக்கு ரூ.15, ரூ.2 லட்சத்துக்கு அதிகமான பரிமாற்றத்துக்கு ரூ.25-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனுடன் கூடுலாக சேவை வரியும் உண்டு. ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு உடனடியாக பணத்தை பரிமாற்றம் செய்யும் ஐஎம்பிஎஸ் முறைக்கு இதைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரொக்கமற்ற பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் மற்றொரு நடவடிக்கையாக வங்கியில் உள்ள பணத்தில் ரூ.1000-க்கு மேல் இணையவழியில் பரிமாற்றம் செய்வதற்கான கட்டணத்தை ரத்து செய்யுமாறு பொதுத் துறை வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி என்இஎஃப்டி, ஐஎம்பிஎஸ், யுபிஐ, யுஎஸ்எஸ்டி உள்ளிட்ட இணையவழி மின்னணு பணப்பரிமாற்றத்துக்கான கட்டணத்தை பொதுத்துறை வங்கிகள் ரத்து செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...