ஏர்டெல், ஐடியா, வோடாஃபோனை நிறுவனங்களை தொடர்ந்து இலவச அழைப்புகளுக்கான வசதியை அறிவித்தது ஏர்செல் நிறுவனம்.
இதனால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரிய சரிவை
சந்தித்தன. மேலும் தற்போது ஜியோ நிறுவனம் இந்த இலவச சேவையை 2017 மார்ச்
மாதம் வரை நீட்டித்துள்ளது. இதனால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இலவச
சேவைகளை அறிவிக்கத் தொடங்கியுள்ளன. ஏர்டெல், ஐடியா, வோடாஃபோனை ஆகிய
நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது ஏர்செல் நிறுவனமும் இலவச சேவையை
அறிவித்துள்ளது.
ஏர்செல் நிறுவனம் ரூபாய் 14 மற்றும் ரூபாய் 249-க்கு இந்த சேவையை அறிவித்துள்ளது.
14 ரூபாய் சேவையின்படி ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு
மட்டும் இந்தியா முழுவதும் ஏர்செல் மற்றும் பிற நிறுவன
வாடிக்கையாளர்களுடனும் இலவசமாக தொடர்பு கொள்ள முடியும்.
ரூபாய் 249 சேவையின்படி ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள்
இந்தியா முழுவதும் ஏர்செல் மற்றும் பிற நிறுவன வாடிக்கையாளர்களுடனும்
இலவசமாக தொடர்பு கொள்ள முடியும். மேலும் சேவையை பயன்படுத்துபவர்கள் அளவற்ற
2G data-வை பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் ஏர்செல் தரப்பிலிருந்து
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...