பல கோடி ரூபாய் மின் கட்டண பாக்கி வைத்துள்ள பள்ளி, அரசு அலுவலகங்களுக்கு மின்வாரியம், 'நோட்டீஸ்' அனுப்பி வருகிறது.
தமிழகத்தில், 20.63 லட்சம் விவசாய இணைப்பு உட்பட, 2.73 கோடி மின்
இணைப்புகள் உள்ளன. தனியாரிடம் மின்சாரம் கொள்முதல், கட்டண பாக்கி, அரசு
மானியம் நிலுவை போன்றவற்றால் மின்வாரியம் கடன் சுமையில் தத்தளிக்கிறது.
பெரும்பாலும் அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளே, அதிகளவில் மின்
கட்டணத்தை பாக்கி வைத்துள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும், 10 கோடி ரூபாய் முதல், 20
கோடி வரை இவை பாக்கி வைத்துள்ளன. அவற்றை வசூலிக்க மின்வாரியம் களம் இறங்கி
உள்ளது; பள்ளி, உள்ளாட்சி அமைப்பு, அரசுத்துறை நிறுவனங்களுக்கு, 'நோட்டீஸ்'
அனுப்பி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில், 15 ஆயிரம் இணைப்புகளுக்கு,
ஒன்பது கோடி ரூபாய் நிலுவை உள்ளது.
மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: உள்ளாட்சி அமைப்பு, அரசு துறைகளில்
மின்கட்டணத்திற்கு தனியாக நிதி ஒதுக்கப்படுகிறது; ஆனால், மின்வாரியத்தில்
செலுத்துவதில்லை. இதனால் நீண்டகால நிலுவை ஏற்படுகிறது. 'நோட்டீஸ்'
கொடுப்பதால் நிலுவைத் தொகை வேகமாக வசூலாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...