கோவை பாரதியார் பல்கலை நிர்வாகம், தொலைதுார கல்வி மையத்தின், 2016 - 17ம்
ஆண்டிற்கான அங்கீகாரத்தை, புதுப்பிக்காமல் மெத்தனமாக இருப்பதாக, அதிருப்தி
எழுந்துள்ளது.
நடப்பு, 2016 - 17ம் கல்வியாண்டில், தொலைதுார கல்வி மையங்கள் நடத்த, நாடு முழுவதும் அங்கீகாரம் பெற்ற பல்கலைகள் பெயர் பட்டியல், யு.ஜி.சி., இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதில், கோவை பாரதியார் பல்கலையின் பெயர் இல்லை. இது குறித்து, தமிழ்நாடு பல்கலை பேராசிரியர்கள் சங்க மாநில தலைவர் பசுபதி கூறியதாவது:
நடப்பு கல்வியாண்டிற்கான அங்கீகாரத்தை, பாரதியார் பல்கலை புதுப்பித்து கொள்ளாமல் இருப்பது, அதிருப்தியை உருவாக்கியுள்ளது. மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில், பல்கலை நிர்வாகிகள் மெத்தனமாக இருப்பது கண்டிக்கத்தக்கது. பல்கலை மானியக்குழு வெளியிட்ட அங்கீகார பட்டியலில், தமிழகத்தில், நான்கு பல்கலைகளின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது வேதனைக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.
பாரதியார் பல்கலை நிர்வாகிகள் கூறுகையில், 'தொலைதுார கல்வி மற்றும் தேர்வு மையங்கள் அமைப்பில், யு.ஜி.சி.,யின், வரையறையை எதிர்த்து அனைத்து பல்கலைகளும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. எனவே, இது பாரதியார் பல்கலைக்கு மட்டுமான சிக்கல் கிடையாது. தமிழகத்தில், பெரும்பாலான பல்கலைகள் இப்பிரச்னையை எதிர்கொண்டு வருகிறது' என்றனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...