தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்ய தேவையில்லை' என, பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில், கடந்த காலங்களில், சீனியாரிட்டி மூலம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். நியமனம் செய்யப்பட்ட ஓராண்டில், அவர்களுக்கு பணி வரன்முறை செய்யப்பட வேண்டும். தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் தகுதிகாண் பருவம் முடிக்க வேண்டும்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட, ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்வதில் குழப்பம் இருந்தது.
இதனால், 2010 -- 11ல், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பணி வரன்முறை செய்யவில்லை. மேலும், அவர்களது பதவி உயர்விலும் சிக்கல் ஏற்பட்டது. இந்த குழப்பத்திற்கு, பள்ளிக் கல்வி இயக்குனரகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.'ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தனியாக பணி வரன்முறை செய்ய தேவையில்லை; இரண்டு ஆண்டுகளில் தகுதிகாண் பருவம் மட்டும் முடித்தால் போதும்' என, தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...