தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தின் தரத்தை
மேம்படுத்தக்கோரிய வழக்கில் உள்துறை, பள்ளிக்கல்வித்துறை பதில் மனுத்
தாக்கல் செய்த தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் கல்வி மற்றும் கல்விக்கான வசதிகள் முழுமையாக வழங்கப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கால மாற்றத்துக்கு ஏற்ப பாடத்திட்டங்களில் உரிய மாற்றம் கொண்டுவர வேண்டும் என அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்த செய்தியின் அடிப்படையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர்
(ஜூடிசியல்) பொதுநலன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் 1
முதல் 10-ம் வகுப்பு வரையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒரே மாதிரியான
பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்தவும், முறைப்படுத்தவும் தமிழக அரசுக்கு
உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ்.நாகமுத்து அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரணைக்கு ஏற்ற அமர்வு, உள்துறை, கல்வித்துறை முதன்மை செயலர்கள்,
தொடக்கக் கல்வித்துறை, பள்ளிக்கல்வி துணைச் செயலர்கள், பள்ளிக் கல்வி,
தொடக்கக் கல்வி இயக்குனர்கள் ஆகியோர் 4 வாரத்தில் பதில் மனுத் தாக்கல்
செய்ய உத்தரவிட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...