டிபாசிட்டாகப் பெறப்பட்ட பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் பற்றிய விவரங்களை
அனைத்து வங்கிகளும் இமெயில் வாயிலாக தெரிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
காலக்கெடு:
மத்திய அரசு செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள கொடுக்கப்பட்டு இருந்த, 50 நாட்கள் காலக்கெடு நேற்றுடன்(டிச.,30) முடிவுக்கு வந்தது.
உத்தரவு:
இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டிபாசிட் செய்ய கொடுக்கப்பட்ட 50 நாள் அவகாசம் முடிவடைந்தவுடன், அன்றைய தினம்(டிச.,30) மாலை வரை வங்கிகளில் டிபாசிட்டாக பெறப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் விவரங்களை இமெயில் வாயிலாக அனுப்ப வேண்டும்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
அனைத்து வங்கிக் கிளைகளும் டிச.,30ம் தேதி மாலை வரை டிபாசிட்டாகப் பெற்ற பழைய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கிக் கிளை அல்லது கருவூலத்தில் டிச., 31ம் தேதி(இன்று) செலுத்தியாக வேண்டும். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு இது பொருந்தாது. மேலும் வங்கிகளின் கருவூலங்களில் நோட்டுகளை பாதுகாக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...