விண்வெளி ஆராய்ச்சியின் வளர்ச்சிக்கு எல்லையே இல்லை என்பது தற்காலத்தில்
நிரூபணமாகிவரும் உண்மை.
குறைந்தது வாரத்துக்கு ஒரு விண்கலத்தையாவது
ஆராய்ச்சி மையங்கள் விண்ணுக்கு அனுப்பாமல் இருப்பதில்லை.செயல்படும் விண்கலம் தவிர்த்து காலாவதியான விண்கலத்தின் உடைந்த பாகங்கள்
மட்டும் 5 லட்சத்துக்கும் மேல் குப்பைகள் போல் விண்ணில் குவிந்து உள்ளன.
இதனால் பெரும் விபரீதம் என சொல்லும் அளவுக்கு விபத்துகள் ஏதும்
நிகழ்ந்ததில்லை என்றாலும் குப்பைகளை அப்படியே விடுவது சரியாகாது என்ற
நோக்கில் ஜப்பான் வின்வெளி ஆராய்ச்சி மையம் அதனை சுத்தம் செய்யும் பொருட்டு
மீன் வலை போன்ற ஒரு காந்தவலையினை உருவாக்க இருக்கின்றனர்.
விண்ணில் தேவையற்ற விண்கலத்தினுடைய பாகங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் விதத்தில் இதை உருவாக்கியுள்ளனர். இந்த வலையை சுமந்து செல்வது ஒரு விண்கலம்தான் என்றாலும் பாகங்களை ஈர்த்துக்கொண்டு மீண்டும் பூமிக்கு திரும்புவது போல் அதை வடிவமைக்க உள்ளனர். இந்த தொழில்நுட்பமானது இன்னும் ஐந்து வருடங்கள் கழித்துதான் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...