திரையரங்குகளில் திரைப்படத்தை ஒளிப்பபரப்புவதற்கு முன்பு தேசியக்கீதம்
இசைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டடதையடுத்து பெரும்பாலான
திரையரங்குகளில் மாலை காட்சி தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம்
இசைக்கப்பட்டது. அப்போது தேசியகொடியும் திரையில் காண்பிக்கப்பட்டது.
போபாலைச் சேர்ந்த ஷியாம் நாராயணன் என்பவர் திரைப்படங்கள் தொலைக்காட்சிகளில் தேசியக்கீதம் இழிவுப்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் அமிதவா ராய் ஆகியோர் அடங்கி பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாடு முழுவம் உள்ள திரையரங்குகளில் திரைப்படக் காட்சிகளை ஒளிப்பரப்புவதற்கு முன்பு தேசியக் கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என ஆணையிட்டனர்.மேலும் தேசியக்கீதம் இசைக்கப்படும் போது திரையில் தேசியக்கொடி காட்டப்பட வேண்டும் என்றும் திரையரங்குகளில் இருக்கும் மக்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.
10 நாட்களில் நடைமுறை படுத்த வேண்டும்
இந்த உத்தரவை 10 நாட்களில் நடைமுறை படுத்த வேண்டும் என்றும் தொலைக்காட்சிகள் வணிகரீதியிலான நிகழ்ச்சிகளில் தேசியக்கீதத்தை பயன்படுத்தக்கூடாது என தெரிவித்தனர். மேலும் விரும்பத்தகாத பொருட்களில் தேசியக்கீதத்தை அச்சிடக்கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
தேசியக்கீதம் கூட தெரியவில்லை
தற்போதுள்ள மக்களுக்கு தேசிய கீதத்தை எப்படி பாடுவது என்று தெரியவில்லை என்றும் நீதிபதிகள் சாடினர். தேசியக்கீதம் மக்களுக்கு கட்டாயமாக கற்றுத்தரப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மத்திய அரசு ஒப்புதல்
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை நடைமுறைபடுத்துவதாக மத்தியரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகளின தலைமை செயலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றும் இதுதொடர்பான விளம்பரம் ஊடகங்களில் வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உரிமையாளர்கள் வரவேற்பு
உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்புக்கு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட நடிகர் நடிகைகள் வரவேற்பு தெரிவித்தனர்.
உடனடியாக இசைத்த திரையரங்குகள்
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்து 24 மணிநேரம் ஆவதற்குள்ளேயே சென்னையில் பெரும்பாலான திரையரங்குகள் மாலை காட்சியை திரையிடுவதற்கு முன்பு தேசியக்கீதத்தை இசைத்தனர்.
எழுந்து நில்லுங்கள்
தேசியக்கீதத்தை இசைப்பதற்கு முன்பு எழுந்து நிற்கக்கோரிய ஆங்கில வாசகத்தை திரையரங்குகள் ஒளிப்பரப்பின.
திரையில் இடம்பெற்ற தேசியக்கொடி
தேசியக்கீதம் இசைத்தபோது திரையில் தேசியக்கொடியையும் திரையரங்குகள் இடம்பெறச்செய்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...