அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களும் ஆசிரியர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டு, 84 வருடங்களுக்குப் பிறகு அங்கு, நிதிநிலை சரியில்லாமல் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல்
நா, 2013 ஆம் ஆண்டு அரசு பலகலைக் கழகத்தைக் கையகப்படுத்தியது.
இந்நிலையில், அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் ஊழியர்களும் ஆசிரியர்களும் சிதம்பரத்தின் காந்தி சிலை அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர், ஊழியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், சலுகைகள் பறிப்பு, பணிநீக்கம், சம்பள குறைப்பு நடவடிக்கையை கண்டித்து ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்ம் ஆதரவு தெரிவிக்கும் வகையில்திமுக, பாமக, பாஜக, மூமுக, கட்சியினர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழக அரசு தனிக் குழு அமைத்து, இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் சங்கத் தலைவர் மனோகரன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த மாதம் 23-ஆம் தேதி பல்கலைக் கழகத்தை அரசு கையகப்படுத்தியும் கல்வி கட்டணத்தை குறைக்கவில்லை என கூறி மருத்துவ மாணவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...