சுற்றுலா
துறை கருத்தரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு
ஏற்படுத்தாத, 'எலக்ட்ரிக் சைக்கிள்' பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
சுற்றுலா துறையும், இந்திய பசுமை சுற்றுலா சங்கமும் இணைந்து, சென்னையில்,
ஒரு நாள் கருத்தரங்கை நேற்று நடத்தின. இதில், கோவையை சேர்ந்த, 'ஸ்பெரா'
நிறுவனத்தின், சுற்றுச்சூழல் பாதிக்காத, 'எலக்ட்ரிக் சைக்கிள்' அறிமுகம்
செய்யப்பட்டது.
இது குறித்து, அந்நிறுவன அதிகாரி கூறியதாவது: சாதாரண சைக்கிள் போல காட்சி தரும், 'எலக்ட்ரிக் சைக்கிள்' மிதிக்காமல், 25 கி.மீ., முதல், 100 கி.மீ., வேகத்தில் செல்லும். தினமும், ஆறு மணி நேரம் சார்ஜ் செய்தால், 100 கி.மீ., துாரம் மிதிக்காமல் செல்லலாம். 'ஐந்து கியர், டிஸ்க் பிரேக்' ஆகியவை இதன் சிறப்பம்சம். இதில் உள்ள, 'பேட்டரி'யை 1,000 முறை, 'சார்ஜ்' செய்யலாம். இதன் விலை, 41 ஆயிரம் முதல், 61 ஆயிரம் ரூபாய் வரை உள்ளது. தற்போது, ஆன்லைன் மூலம் மட்டுமே விற்கப்படுகிறது. விரைவில், தமிழகத்தில் விற்பனை துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...