முதலுதவி செய்யத் தவறும் காரணத்தினலேயே பலர் உயிரிழக்கின்றனர்.
இந்நிலையில், முதலுதவி சிகிச்சைகள் குறித்த மொபைல் ஆப் ஒன்றை ரெட் கிராஸ் அமைப்புடன் இணைந்து பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் பலர் உயிரிழக்க காரணம்,அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்படாததுதான். விபத்து ஏற்பட்டவுடன் முதலில் செய்ய வேண்டிய ஒன்று முதலுதவி சிகிச்சை. இதுகுறித்த பட்டப் படிப்புகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முதலுதவி குறித்த வழிமுறைகளை செல்போன் ஆப் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் பிட்ஸ் மாணவர்களும், ரெட் கிராஸ் அமைப்பும் இந்த ஆப்-ஐ உருவாக்கியுள்ளது.
ரெட் கிராஸ் அமைப்பு நடத்திய முதலுதவி சிகிச்சை குறித்து ஏழு வாரங்கள் நடந்த சிறப்பு வகுப்புகளில் ’பிட்ஸ்’ பல்கலைகழக மாணவர்கள் ஆறு பேர் கலந்து கொண்டனர். இதில், அதிகளவில் கற்றுக்கொண்ட மாணவர்கள்,அது குறித்து மொபைல் ஆப் உருவாக்க வேண்டும் என முடிவு செய்தனர். இதையடுத்து, ரெட் கிராஸ் அமைப்பின் ஒப்புதல் பெற்று,முதலுதவி சிகிச்சை குறித்த மொபைல் ஆப்பை உருவாக்கியுள்ளனர்.
இதில்இதய அடைப்பு, ரத்தக் காயம், பாம்பு கடி, விபத்து உள்ளிட்டவைகளுக்கு எவ்வாறு சிகிச்சையளிக்க வேண்டும் என்ற தகவல்கள் உள்ளன. இந்த ஆப் அனைவரும் உபயோகிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், தேசிய அவசர எண்ணை தொடர்பு கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.
சாலை விபத்துகள் அதிகளவில் நடக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது கவலையளிக்கிறது என உச்சநீதிமன்றம் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், முதலுதவி சிகிச்சை குறித்த இந்த மொபைல் ஆப் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...