காற்று மாசுபாட்டால் பல்வேறு வகையான நோய்த்தொற்று ஏற்படுவதோடு,
சுற்றுசூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. குறிப்பாக, கழிவுப் பொருட்களைத் தெருவில் வைத்து எரிப்பதால், அதிகளவில் காற்று மாசுபடுகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் தெருவில் வைத்து கழிவுப் பொருட்கள் மற்றும் குப்பைகளை
எரிப்பதற்கு பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது . தடையை மீறி எரிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
சமூக செயற்பாட்டாளர் அல்மித்ரா பட்டேல் உள்ளிட்ட சிலர், திடக்கழிவு மேலாண்மை முறைகளை மேம்படுத்துவது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
அந்த வழக்கு,தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஸ்வேந்தீர் குமார் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, திறந்தவெளியில் குப்பைகளை எரிப்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டனர். தனி நபராகவோ, ஒரு குழுவாகவோ அல்லது ஏதேனும் அமைப்போ திறந்தவெளியில் குப்பைகளை எரித்ததால் அபராதம் செலுத்த வேண்டும். அதாவது, திறந்தவெளியில் சிறியளவில் குப்பைகளை எரிக்கும்போது சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.5 ஆயிரமும், பெரியளவில் குப்பைகளை எரிக்கும்போது ரூ.25 ஆயிரமும் அபராதம் செலுத்த வேண்டும்.
இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவது குறித்து அனைத்து மாநில அரசுகளும் நான்கு வாரங்களுக்குள் செயல்திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதுபோன்று 2016ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை விதிகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும், அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...