திருப்பூர்: அரசு பள்ளிகளுக்கு, கழிப்பறை வசதி செய்து கொடுக்க, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:ஆயத்த ஆடை நிறுவனங்கள், பெறும் லாபத்தில், 2 சதவீதத்தை, தனித்தனியே சிறிய அளவிலான பயன்பாடுகளுக்கு செலவிடுகின்றன. அனைத்து நிறுவனங்களில் இருந்தும் இந்த தொகையை பெற்று, சமூக பயன்பாட்டு நிதியாக சேமிக்கப்படும். வளர்ச்சி திட்டங்களுக்கான செலவினங்கள் அடிப்படையில், 'பையர்'கள், பையிங் ஏஜன்சிகளிடம் இருந்தும், நிதியுதவி பெறப்படும். திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கு தொழிலாளர்கள் முதுகெலும்பாக உள்ளனர். அனைத்து தேவைகளுக்கும் அரசு உதவியை நாடுவதை விட, தொழில் துறையினர் இணைந்தால், சில வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள முடியும். அந்த வகையில், சுகாதாரத்துக்கு முதல் முக்கியத்துவம் அளித்து, அரசு, மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி தரப்படும். கல்வித்துறை வாயிலாக, கழிப்பறை இல்லாத பள்ளிகள் விபரங்கள் சேகரிக்கப்படும். வரும் ஜன., முதல், இந்த பணியை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...