பழைய ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகளை பெற்றுக்கொண்டு புதிய
ரூபாய் நோட்டுகள் கொடுப்பதில் தனியார் வங்கிகளுக்குதான் ஆர்பிஐ
முக்கியத்துவம் கொடுக்கிறது’ என்று புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் பழைய ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகளை
பெற்றுக்கொள்வதில் தனியார் வங்கிகளுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறது;
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடம் மெத்தனம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
அதுபோன்று பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பிறகு
புதிதாக ரூபாய் 2000, 500 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய ரூபாய்
2000 நோட்டுகள் பரவலாக எல்லா வங்கிகளிலும் கிடைக்கின்றன. ஆனால், புதிய 500
ரூபாய் நோட்டு தனியார் வங்கிகளில் மட்டும்தான் கிடைக்கிறது என்றும்
கூறப்படுகிறது.
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி தினமும் பணத்தைப் பெற்றுக்
கொள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை அழைக்கிறது. அதற்கான டோக்கன்களும்
வழங்கப்படுகின்றன. ஆனால், ரிசர்வ் வங்கி முதலில் டோக்கன்
வழங்கியவர்களுக்குப் பணத்தை கொடுக்காமல், தனியார் வங்கிகளுக்குப் பணத்தைத்
தருகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த செயல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை
வீழ்த்தி, தனியார் வங்கிகளின் வளர்ச்சிக்குக் காட்டுவது போல் தெரிகிறது என
தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...