நுனி நாக்கு ஆங்கிலம், இன்டர்நெட், பேஸ் புக், வாட்ஸ்- ஆப், டுவிட்டர்...
என்று இளைஞர்களின் கவனம் சென்று கொண்டிருக்கிறது.
ஆனால் 10ம் வகுப்பு
மாணவன் ஜெய்பிரசாத், திருக்குறளின் 1330 குறள்களையும் கூறுகிறார். தலைகீழாக
கேட்டாலும், துவக்க வார்த்தை கூறினால், அதிகாரப் பெயரை கூறினால்...
இப்படி பல வழிகளிலும் குறள்களை நினைவு வைத்துள்ளார்.
அதற்கான பொருளையும் விளக்குகிறார். இதனால் பல இடங்களிலிருந்தும் அவருக்கு
பாராட்டுக்கள் குவிகின்றன. பார்லிமென்டில் வான் புகழ் வள்ளுவரின்
திருக்குறளை கம்பீரமாய் ஒலித்து 'திருக்குறள் செல்வன் விருது' மற்றும்
பதக்கம், டில்லி தமிழ்ச்சங்கத்தில் விருது, அழகப்பா பல்கலை பன்னாட்டு
கருத்தரங்கில் பதக்கம், பொன்னம்பல அடிகள் வழங்கிய குறள் மாமணி விருது அவரை
உற்சாகப்படுத்தி வருகின்றன. தாயின் அரவணைப்பில் வளரும் ஜெய்பிரசாத்,
திருப்புத்துார் ஆறுமுகம்பிள்ளை சீதைஅம்மாள் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்.
ஜெய் பிரசாத்தின் தமிழார்வத்தை கண்டறிந்த அவரது தமிழாசிரியர் சாம்ராஜ்,
திருக்குறள் மனப்பாடம் செய்ய அறிவுறுத்தினார். ஜெய் பிரசாத் திணறிய
போதெல்லாம் உற்சாகப்படுத்தினார்.
ஜெய்பிரசாத் கூறுகையில், ''தமிழ் ஆசிரியர் துாண்டியதால் தான் 7ம் வகுப்பில் குறள்களை படிக்க ஆரம்பித்தேன். முதல் 6 மாதத்தில் 380 குறள்கள் கொண்ட அறத்துப்பாலின் 38 அதிகாரங்களை மனதிற்குள் கொண்டு சென்று காரைக்குடி வள்ளுவர் பேரவையில் 'அறம்' விருதை முதலில் வாங்கினேன். பின்னர் பிற ஆசிரியர்களும் என்னை உற்சாகப்படுத்தத் துவங்கினர். ஒன்றரை ஆண்டுகளில் 133 அதிகாரங்களையும் மனப்பாடம் செய்து விட்டேன். இப்போது பலரும் என்னை பாராட்டும் போது பெருமையாக உள்ளது. இப்போது எனது கவனமெல்லாம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு,'' என்கிறார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...