'கிராம நிர்வாக அதிகாரி என்ற, வி.ஏ.ஓ., பதவிக்கான, பணி ஒதுக்கீட்டு
கவுன்சிலிங், வரும், 19 முதல் நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார் வெளியிட்டு உள்ள
செய்திக் குறிப்பு:வி.ஏ.ஓ., பதவிகளில் நேரடி நியமனம் செய்ய, பிப்., 28ல்,
எழுத்துத்தேர்வு நடந்தது. இதன் முடிவுகள், ஜூலை, 1ல், வெளியாகின. பின்,
தேர்வு பெற்றவருக்கு, ஆக., 1 முதல், 8 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.
ரேங்க் பட்டியலின்படி, தேர்வான விண்ணப்பதாரர்களுக்கு, வரும், 19 முதல், 23
வரை, கலந்தாய்வு நடக்கிறது. இதற்கான கூடுதல் தகவல்களை, www.tnpsc.gov.in
என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...