அண்ணா பல்கலையின், 'பயோ மெடிக்கல் இன்ஜினியரிங்' துறைக்கு, மத்திய அரசின்
சிறப்பு அந்தஸ்து கிடைத்துள்ளது.
உயர் கல்வியில், அறிவியல் ஆராய்ச்சிகளில்
சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களுக்கு, மத்திய பல்கலை மானியக் குழுவான,
யு.ஜி.சி., சீர்மிகு அந்தஸ்து வழங்குகிறது. அதை பெறும் கல்வி
நிறுவனங்களுக்கு, மத்திய அரசின், பல கோடி ரூபாய் நிதி உதவி கிடைக்கும்.
தமிழகத்தில், கலை, அறிவியல் கல்லுாரிகள் மட்டுமின்றி, அண்ணா பல்கலையின்
பல்வேறு துறைகளுக்கும், யு.ஜி.சி., சீர்மிகு பல்கலைக்கான அந்தஸ்து
வழங்கியுள்ளது.இதன்படி, அண்ணா பல்கலையின், 'பயோ மெடிக்கல் இன்ஜினியரிங்,
இன்ஸ்ட்ரூமென்டேஷன்' துறைக்கு, யு.ஜி.சி.,யின், சீர்மிகு துறைக்கான
அந்தஸ்து வழங்கப் பட்டுள்ளது. மேலும், பல, புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள,
நடப்பு கல்வி ஆண்டில், 23.12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அண்ணா பல்கலை பதிவாளர், கணேசன் கூறியதாவது:பல்கலையில், 25
ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் ஆராய்ச்சிகள் அடிப்படையில், இந்த அந்தஸ்து
கிடைத்துள்ளது. மருத்துவத் துறையில், இன்ஜினியரிங் தொழில்நுட்பத்தின் தேவை,
ஆண்டுக்கு, 15 சதவீதம் அதிகரிக்கிறது. இதற்கு பல ஆராய்ச்சிகளும்,
கண்டுபிடிப்புகளும் தேவை.மருத்துவ எலக்ட்ரானிக்ஸ், பயோ டெக்னாலஜி,
இன்ஸ்ட்ரூமென்டேஷன், மெடிக்கல் பிசிக்ஸ் மற்றும் மெக்கட்ரானிக்ஸ் ஆகிய
துறைகள், இந்த அந்தஸ்து பெற இணைந்து செயல்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...