இன்ஜினியரிங் படிப்புக்கான நுழைவுத் தேர்வை தொடர்ந்து, மருத்துவ
படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வையும், குஜராத்தி மொழியில் எழுத,
அனுமதி அளிக்கப்பட உள்ளது.
இந்திய உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்றவற்றில்,
பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, ஜே.இ.இ., என்ற ஒருங்கிணைந்த நுழைவுத்
தேர்வில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், தேர்ச்சி பெற வேண்டும். இந்த
தேர்வில், இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பதில் எழுத, கடந்த ஆண்டு வரை
அனுமதிக்கப்பட்டது.
இந்த ஆண்டு முதல், குஜராத்தி மொழியிலும், ஜே.இ.இ., தேர்வை எழுதலாம் என,
அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற
மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான, நீட் பொது நுழைவுத் தேர்வையும்,
குஜராத்தியில் எழுத அனுமதிக்கப்படலாம் என தெரிகிறது.
குஜராத் அரசின் வேண்டுகோளை ஏற்று, மத்திய சுகாதார அமைச்சகம், இந்த முடிவை
எடுத்துள்ளது; தேர்வை நடத்தும், சி.பி.எஸ்.இ., இடைநிலை கல்வி வாரியத்திற்கு
கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...