கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற 24 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 1ஆம் தேதி
வரை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஆர்.சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு வருகிற 24ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், டிசம்பர் 29 ஆம் தேதியன்று விடுமுறை கால நீதிமன்றம் செயல்படும். இந்த நாளில் அவசரம் கருதித்தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மட்டுமே விசாரிக்கப்படும்.
இந்த நாளுக்கான நீதிபதிகளாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வைத்தியநாதனும், வி.பார்த்திபனும் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு கே.கல்யாணசுந்தரமும், ஆர்.மகாதேவனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், முதலில் ஒன்றாக இணைந்து அமர்வு வழக்குகளையும்,பிறகு தனிதனியாக அமர்ந்து மற்ற வழக்குகளையும் விசாரிப்பார்கள்.
இதற்காக வரும் டிசம்பர் 27ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு முன்பாகவே மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், உயர் நீதிமன்ற பதிவுத்துறை வழக்கம்போல அனைத்து நாட்களிலும் இயங்கும்’ என அந்த அறிக்கையில் என்று கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...