பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சி இலக்கு பெற, கல்வியில் பின் தங்கியோர்,
அதிக மதிப்பெண் பெற்ற
மாணவர்களுக்கு, தனித்தனியாக, உண்டு உறைவிட பயிற்சி
வகுப்புகள், ஐந்து கல்லுாரிகளில், நேற்று துவங்கின; வரும் 31ம் தேதியுடன்
முடிகிறது.
கோவை மாவட்டம், கடந்தாண்டு வெளியான, பொதுத்தேர்வு முடிவுகளின் படி,
ஒன்பதாவது இடத்தில் உள்ளது. பத்தாம் வகுப்பை காட்டிலும், பிளஸ் 2 தேர்ச்சி
முடிவுகளே, ஆண்டுதோறும் பின்னடைவை சந்திக்க வைக்கின்றன.
நடப்பு கல்வியாண்டில், மாநில தரவரிசை பட்டியலில், முதல் ஐந்து இடங்களை
பெறும் நோக்கில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, உண்டு உறைவிட பயிற்சி
வகுப்புகள், நேற்று முன்தினம் துவங்கின. இது, வரும், 31ம் தேதி வரை
நடக்கிறது.
இப்பயிற்சிக்கு, கணபதி, சி.எம்.எஸ்., கலை அறிவியல் கல்லுாரி, நரசீபுரம்,
கலைமகள் கலை அறிவியல் கல்லுாரி, காரமடை, சக்தி பொறியியல் கல்லுாரி,
சிங்காநல்லுார், கே.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி, மதுக்கரை, நாராயணகுரு
பாலிடெக்னிக் கல்லுாரி ஆகிய, ஐந்து இடங்களில், மாணவர்கள் தங்கும் வசதியோடு,
சிறப்பு வகுப்புகள் நடக்கின்றன.
இதில், கல்வியில் பின்தங்கிய, 1,500 மாணவர்களுக்கு, கலை, அறிவியல் பிரிவு
என, தனித்தனியாக பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இவர்களுக்கு பாடம் நடத்த 25
ஆசிரியர்கள் கொண்ட சிறப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன்கூறியதாவது:
அரசு, நகராட்சி, ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில் படிக்கும், பின்தங்கிய
மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.
மாநில ரேங்க் பெற, பள்ளித்தேர்வில் ஆயிரம் மதிப்பெண்களுக்கு அதிகமாக பெற்ற,
40 மாணவர்களுக்கு, கே.பி.ஆர்., பொறியியல் கல்லுாரியில், உண்டு உறைவிட
வகுப்பு நடக்கிறது.
கற்பித்தலோடு, உடற்பயிற்சி, யோகா, தன்னம்பிக்கை வகுப்புகள் நடத்தி,
மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு முதன்மை
கல்வி அலுவலர் கூறினார்.Revision Exam 2025
Latest Updates
Home »
» உண்டு உறைவிட வகுப்பு துவக்கம்; நூறு சதவீத தேர்ச்சிக்கு இலக்கு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...