டில்லி மற்றும் மத்திய பிரதேசத்தில், எங்கெங்கு பொது கழிப்பறைகள் உள்ளன
என்பதை, 'கூகுள் டாய்லட் லொக்கேட்டர்' ஆப் மூலம் தெரிந்து கொள்ளும் வசதி
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் வெங்கையா
நாயுடு, டாய்லெட்டைக் கண்டறியும், கூகுள் டாய்லட் லொக்கேட்டர் ‛ஆப்'பை
வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் அவர் தெரிவித்ததாவது : பிரதமரின் ‛தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், திறந்த வெளியில் இல்லாமல், பொது கழிப்பறையை பயன்படுத்தும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த ஆப் வெளியிடப்பட்டுள்ளது. 6,200 பொதுக் கழிப்பறைகள் எங்கெங்கு உள்ளன விபரங்கள் தரப்பட்டுள்ளது. டில்லி மற்றும் ம.பி.,யில் மட்டும் உள்ள கழிப்பறைகள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம், விரைவில் மற்ற மாநிலங்களுக்கும் விரிவு படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...