Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விக்கிபீடியா போன்று தமிழகத்தின் விகாஸ்பீடியா துவக்கம்.!

      மத்திய மின்னனுவியல், தகவல் தொழிற்நுட்ப அமைச்சகம், இந்திய அரசும், உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஹைதரபாத் மற்றும் சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையமும் இணைந்து

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வருவாய்த்துறை கூட்ட அரங்கில்  விகாஸ்பீடியா வலையதள தகவல் பரிமாற்ற பயிற்சி  29.11.2016 செவ்வாய்கிழமை காலை 9.00 மணிமுதல் மதியம் 3.00 மணி வரை நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 30க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள், வேளாண்மைத்துறை விஞ்ஞானிகள், தன்னார்வ தொண்டு நிறுவன அலுவலர்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கணினி மைய முகவர்கள் கலந்துகொண்டனர்.

இப்பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் அவர்களும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும், வேளாண் ஆராய்ச்சி மைய முதுநிலை விஞ்ஞானி துவக்கி வைத்து விகாஸ்பீடியா வலைதளத்தின் தொழிற்நுட்பங்களை எடுத்துரைத்தனர்.

சமூக மேம்பாட்டிற்கான தகவல் பரிமாற்ற தளம் !

விகாஸ்பீடியா, சமுதாய மேம்பாட்டிற்கான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் மக்கள் பகிர்ந்துகொள்வதற்காக, தேசிய அளவில் செயல்படும் ஒரு பன்மொழி தளம். தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சமுதாய மேம்பாட்டில் பங்கேற்றுள்ள முக்கிய அங்கத்தினரான தன்னார்வளர்கள், அரசு, அரசுசாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகளை ஒருங்கிணைத்து, சமூக மேம்பாடு பற்றிய தகவல்கள் மற்றும் அனுபவங்களை மக்களுடன் பரிமாறிக்கொள்ளும் நோக்கத்துடன் இத்தளம் செயல்பட்டு வருகிறது.

விகாஸ்பீடியா, தேர்ந்தெடுத்த துறைகளில், சமுதாயத்தில் பின்தங்கிய மக்களின் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும், வாழ்வாதாரம் சார்ந்த, ஆக்கப்பூர்வமான மற்றும் நம்பகமான தகவல்கள் மற்றும் தகவல் சார்ந்த சேவைகளை, அவர்களது தாய்மொழியிலேயே அளிக்கிறது. மேலும், இந்த தளம், பலரின் பங்கேற்பால் ஒருமித்த தகவல்களை உருவாக்கவும், கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் தேவைதான கட்டமைப்பை வழங்குகிறது.

நோக்கம்
·        
சமுதாயத்தில்
பின்தங்கிய மக்களின் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் தகவல் சேவைகள்
·         தேர்ந்தெடுத்த தகவல் மற்றும் தகவல் சேவைகளை அளிப்பதன் மூலம், மக்கள் பணியாளர்களின் செயல்திறனை மேம்படுத்தி, அவர்கள் சிறப்பாக பணியாற்ற வழிவகை செய்தல்
·         தேர்ந்தெடுத்துள்ள ஆறு துறைகள் சம்பந்தமான கருத்துக்களை மக்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் பல்வேறு தகவல் தொழில்நுட்பங்களின் வாயிலாக, மக்களிடையே சிறப்பான தகவல் பரிமாற்றத்திற்கு வழிவகை செய்தல்.



தகவல் வழங்கப்படும் துறைகள்

·         வேளாண்மை
·         உடல்நலம்
·         கல்வி
·         சமூக நலம்
·         எரிசக்தி
·          
அணுகுமுறை

·         பலரின் பங்கேற்புடன் தகவல் மற்றும் கருத்து சேகரிப்பு
·         தகவல் சேவைகளை முடிந்தவரையில் அவரவர் தாய்மொழியிலேயே அளித்தல்
·         சமுதாய மேம்பாட்டில் தொடர்புடைய முக்கிய நிறுவனங்களுடன் கூட்டாக
·         செயலாற்றுதல்
·         இதே நோக்கத்துடன் செயல்படும் மற்ற இணையதளங்கள் மற்றும்
·         திட்டங்களுடன் இணைந்து செயல்படுதல்
·         பல்வேறு அங்கத்தினர் மற்றும் ஊடகங்களை ஒருங்கிணைத்து, பயனுள்ள
·         ஒரு தகவல் பரிமாற்றத்திற்கான சூழலை உருவாக்குதல்

சேவைகள்

·         தகவல்கள் மற்றும் கருத்துக்கள் - தமிழிலேயே !
·         மல்டிமீடியா பாடங்கள்
·         இணையவழி பாடங்கள்
·         கருத்து பகிர்வு மேடைகள்
·         மதிப்புக்கூட்டு சேவைகள் - வல்லுனரைக் கேளுங்கள், மதர், வியாபார்  மற்றும் பல சேவைகள்
·         அலைபேசி சேவைகள் (மொபைல் ஆப்ஸ்) - வல்லுனரைக் கேளுங்கள், மதர், ...
·        கேவிகே கோஜ், ஷெல்டர், மக்கள் கணினி மையம்வழிகாட்டி

தன்னார்வாளர் ஆகுங்கள்

உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்கள் மற்றும் சேவைகளின் மூலம், இந்திய மக்களின் மேம்பாட்டிற்காக உதவுகள்.
ஒரு சிறு முயற்சியாக விகாஸ்பீடியாவில் நீங்கள் உங்களது ஆக்கபூர்வமான பகிரும் உங்களது அனுபவங்கள், பலரது வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை உருவாக்கலாம். உங்களது தகவல் பங்களிப்பால், மற்றவர்ளோ அல்லது தொண்டு நிறுவனங்களோ பயன்பெறும்போது, நீங்கள் அடையும் மகிழ்ச்சி அளிவிட முடியாது.

! உங்களின் அதிகபட்ச பங்களிப்பு
உங்களுக்கு பரிசுகளையும் வெல்லும் !

மேலும் விபரங்களுக்கு WWw.wikaspedia.in வலைதளத்திற்கு செல்லவும்

விகாஸ்பீடியா தளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டுவரும் "இந்திய மேம்பாட்டு நுழைவாயில்" திட்டத்தின் ஒர் அங்கமாகும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், குறிப்பிட்ட துறைகளில், சமுதாய மேம்பாடு சார்ந்த தேர்ந்தெடுத்த தகவல்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை பொதுமக்களுக்கு அளிப்பதாகும்.


மத்திய மின்னுவியல் மற்றும் தகவல் தொழிற்நுட்ப அமைச்சகம்,
இந்திய அரசு
சி-டாக் (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம்), ஹைதராபாத்
சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம், சென்னை





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive