ஆண்டு வருமானம் தொடர்பாக தவறான தகவல் தெரிவிப்போர் மீது சட்ட ரீதியில்
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம்
(சிபிடிடி) எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில்
தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: வருமான வரி சட்டத்தில், வருமான வரி
செலுத்துவோர் தங்களது முந்தைய ஆண்டு வருமானம் தொடர்பான
கணக்குகளை திருத்தம் செய்து மீண்டும் சமர்பிக்கலாம் என்ற விதியுள்ளது. இதை வருமான வரி செலுத்துவோர்களில் சிலர் தவறாக பயன்படுத்துவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அதாவது, மத்திய அரசால் கடந்த மாதம் 8-ஆம் தேதி ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது, வாடிக்கையாளர்கள் தங்களிடம் இருக்கும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சிலர் தங்களிடம் இருக்கும் கணக்கில் காட்டாமல் இருக்கும் கருப்புப் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ய வாய்ப்பிருப்பதை புரிந்து கொண்டு, வங்கிகளில் ரூ.2.50 லட்சத்துக்கு அதிகமாக பணத்தை டெபாசிட் செய்தால், அத்தொகையில் அவர்களுக்கு 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையறிந்து கொண்டு, வருமான வரி செலுத்துவோரில் சிலர் முந்தைய ஆண்டு வருமானம் தொடர்பான கணக்குகளை தங்களுக்கு சாதகமாக திருத்தி மீண்டும் தாக்கல் செய்து வருவதாகவும், இதனால் 50 சதவீத வரிக்குப் பதிலாக 30 சதவீத வரியை அவர்கள் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு மீண்டும் தாக்கல் செய்யப்படும் ஆண்டு வருமானம் தொடர்பான திருத்தப்பட்ட கணக்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதில், திருத்தப்பட்ட முந்தைய ஆண்டு வருமான கணக்குகளில் ஏதேனும் முறைகேடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டோர் மீது அபராதமும், சட்ட ரீதியிலான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் மத்திய நேரடி வரிகள் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வருமான வரிச் சட்டத்தின் 139(5)-ஆவது பிரிவில், ஆண்டு வருமானம் தொடர்பாக கணக்கை தாக்கல் செய்வோர், தங்களது முந்தைய கணக்குகளில் ஏதேனும் தகவல் விடுபட்டிருந்தாலோ அல்லது தவறான தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தாலோ, அதில் திருத்தம் செய்து மீண்டும் ஆண்டு வருமான கணக்கை தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...