தென் சென்னையில், வாட்ஸ் அப் குரூப் மூலம் புகார்கள் பெற்று உடனடியாக
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய செயல்முறையால் புகாருக்கு
உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில், சிங்காரச் சென்னையை சின்னாபின்னமாக மாற்றிய வர்தா புயலால் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இதில், சென்னையில் அதிகளவில் இழப்புகள் ஏற்பட்டன. ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இன்னும் சில இடங்களில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தாமல் இருக்கின்றன. இந்தப் புயலால் மக்கள் அதிகளவில் இழப்பைச் சந்தித்தனர்.
இந்நிலையில், தென் சென்னை மக்கள் புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரண உதவித் தொகை பெறுவதற்கு, தென்சென்னை மண்டல காவல்துறை ஆய்வாளர் கோபால சுந்தரராஜ் வாட்ஸ்அப் குழு ஒன்றை ஒருங்கிணைத்துள்ளார். இந்த வாட்ஸ் அப் குழுவில் 60 குடியிருப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர். இந்த வாட்ஸ் அப் குழுவின் மூலம் அடையார், வளசரவாக்கம் மற்றும் பெருங்குடி பகுதி மக்கள் புகார் அளித்து வருகின்றனர். வர்தா புயல் பாதிப்புக்கு நிவாரணத் தொகை பெறுவதற்காக தொடங்கப்பட்ட வாட்ஸ் அப் குழு நாளடைவில், மக்களின் அனைத்துப் புகார்களையும் பெற ஆரம்பித்தன.
சாலையில் தண்ணீர் தேங்கியிருத்தல், கழிவுநீர் தேக்கம், சாக்கடை சுத்தம் செய்யாமல் இருப்பது, தெருவிளக்கு பாரமரிப்பு போன்ற புகார்கள் வாட்ஸ் அப் குழுமூலம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதுபோன்று, சென்னையில் போலீஸார்கள் மற்ற போலீஸாரை தொடர்புகொள்வதற்காக போலீஸ் வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டன. சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் தலைமையில் உருவாக்கப்பட்ட குழுவில், கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில், தகவல்களை மட்டும் பரிமாறாமல் முக்கிய உத்தரவுகளையும் குழுவில் பதிவிடுகின்றனர். அதனடிப்படையில், அவருக்குக்கீழ் உள்ள அதிகாரிகள் செயல்படுகின்றனர். இதேபோல, சென்னையில் உள்ள 12 மாவட்ட காவல் துணை ஆணையர்களில் பெரும்பாலானோர் வாட்ஸ் அப் குழுக்களை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...