கல்மாடி, சவுதாலாவின் நியமனத்திற்கு விளக்கம் தராத,
இந்திய ஒலிம்பிக் சங்கத்தை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் 'சஸ்பெண்ட்' செய்தது.
நியமனம்:
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ.,) கவுரவ ஆயுட்கால தலைவர் பதவிக்கு கல்மாடி, அபய்சிங் சவுதாலாவுக்கு நியமிக்கப்பட்டனர். இருவரும் ஊழல் புகாரில் சிக்கியதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கல்மாடி பதவியை ஏற்க மறுத்தார். சவுதாலா மட்டும் பதவியை ஏற்பதில் உறுதியாக உள்ளார்.
பதில் தர கெடு:
இதனால் கோபமடைந்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம், இவர்களின் நியமனம் குறித்து ஐ.ஓ.ஏ.,வுக்கு 'நோட்டீஸ்' அனுப்பியது. நேற்றைக்குள் பதில் தர கெடு விதித்திருந்தது. பதில் அளிக்காத காரணத்தால் ஐ.ஓ.ஏ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டது. அங்கீகாரம் ரத்தானதால், அரசிடம் இருந்து நிதி மற்றும் இதர சலுகைகளை ஐ.ஒ.ஏ., பெற முடியாது.
நீக்க வேண்டும்:
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் கூறுகையில்,' கல்மாடி, சவுதாலாவை கவுரவ ஆயுட்கால தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்வரை, ஐ.ஓ.ஏ., 'சஸ்பெண்ட்' செய்யப்படுகிறது,'' என்றார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...